மரபுக்கவி முயற்சி

வெகு நாட்களாகவே மரபுக்கவிதைகள் எழுத வேண்டும் என்று ஆசை. முதல் நான்கு இங்கே. இவற்றில் முதல் இரண்டும் கலிவிருத்தங்கள் , அடுத்த இரண்டும் நேரிசை வெண்பாக்கள்.
கடவுள்
அனலும் புனலும் புவியும் வளியும்
பனியும் வெயிலும் கதிரும் மதியும்
வனமும் வரையும் உடலும் உயிரும்
உனையும் தந்தான் உணர்வாய் மனனே

அந்தி மழை
யாக்கை நடுக்கிடும் நள்ளல் அடைமழை
ஊக்கம் கெடுத்திடும் காலைப் பெருமழை
நோக்க நனைந்திட மோப்ப இனிதாம்
பாக்கள் புகழ்ந்திடும் மாலை மழையே

மழை நம் விருப்பத்துக்கெல்லாம் பெய்யாது  எனினும் , மாலை மழையே மனதுக்கு இனியது என்பது என் கருத்து. காலை எழுந்த உடன் மழை பெய்தால் திரும்ப தூங்கத்தான் தோன்றும் .

என் மருமான்
வளியைப் பிடிக்க முயன்றிடுவான் போன்றே
களிப்போடே ஆட்டிடுவான் கையை – தளிர்க்கரமோ
நாற்றமுடை மென்முடியைப் பற்றி இழுத்திட
ஆற்றா(து) அழுதிடு வான்

ஒன்றரை மாதம் நிறைந்த என் தங்கை மகன் பற்றியது. தன் தலை முடியைத் தானே பிடித்து இழுத்துக் கொண்டு வலியில் அழுவான் .

கடல் நீர்
நாவுணரா நுண்ணளவு உப்பைப் பெருநதி
மாவேலை கொண்டு கலந்திடும்  – ஆவியாய்
வெப்பத்தில் நீருயரப் பின்கீழே தங்கிடும்
உப்பால் உவர்க்கும் கடல்

இது நம் செந்தில் கவுண்டரிடம் கேட்ட பல கேள்விகளுள் ஒன்றுக்கான பதில்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TrqqBQagDWM#t=32s

சில  சொற்கள் வழக்கில் இல்லாதவை. அவற்றின் பொருள் கீழே .

வளி – காற்று

யாக்கை – உடல்

ஆற்றாது – தாங்க முடியாமல்

ஊக்கம் – ஆர்வம்  (mood, enthusiasm )

நள்ளல் – நடு இரவு

நோக்க – பார்க்க

வேலை – கடல்

உவர்ப்பு – உப்புச்சுவை

Advertisements

One Response to “மரபுக்கவி முயற்சி”

  1. madthanu Says:

    ஊக்கம், நோக்க, உவர்ப்பு – வழக்கில் இல்லையா? 😦

    Really nice poems!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: